நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என மேலூர் கதிரேசன் சார்பாக தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், கதிரேசன் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்க கோரிய வழக்கை, தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜரான போது, அவரின் அங்க அடையாளங்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது தான் பதிவாளராக அங்கு இருந்ததாகவும் கூறினார். மேலும் இந்த வழக்கை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றி பட்டியலிட உத்தரவு பிறப்பித்தார்.







