வாத்தி படத்தின் முதல் பாடல் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நடிகர் தனுஷ் வா வாத்தி என்ற பாடலை பாடுவது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படம், தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி படத்தில், சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தபடத்தின், போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகிய நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் வருகிற 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் எழுதியுள்ள இந்த பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
https://twitter.com/dhanushkraja/status/1589918204734107648?t=o_ug6UV771dWyzaUiY0NIA&s=19
அந்த வீடியோவில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தனுஷ் வா வாத்தி என்ற பாடலின் ஒருசில வரிகளை பாடி வெளியிட்டுள்ளார். பாடல் 10-ம் தேதி வெளிவர உள்ள நிலையில், தனுஷ் தற்போது தனது குரலில் அந்த பாடலை பாடி முன்னதாகவே வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.








