நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான AK 63 திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில், த்ரிஷா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து முன்னதாக படக்குழு சென்னை திரும்பியது.
இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளார். இதனிடையே, அஜித்குமாருக்கு சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
https://twitter.com/MythriOfficial/status/1768261140415713575
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அஜித் குமாரின் அடுத்த படமான ‘AK 63’ திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” (GoodBadUgly) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த தகவல் இன்று காலையில் இருந்தே இணையத்தில் களைகட்டிய நிலையில், தற்போது அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி உறுதியாகி உள்ளது. படத்தின் போஸ்டருடன் டைட்டிலை படக்குழு வெளியிட்டது.
அஜித்தின் ஏகே 63 படம் 2025ஆம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. ஹாலிவுட்டில் வெளியாகி சக்கைபோடு போட்ட பழைய க்ளாசிக் கௌபாய் திரைப்படத்தின் பெயர் “The Good Bad and The Ugly” என்பது குறிப்பிடத்தக்கது.







