முக்கியச் செய்திகள் சினிமா

“நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி”: வெளியானது வலிமை Glimpse

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை  படத்தின்  Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த வலிமை அப்டேட் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை ( Glimpse) வீடியோ வெளியானது. அதில் பைஸ் சாகச வீரராக அஜித் காட்சியளிக்கிறார்.  வலிமை அளவற்ற வலிமை – இதுவே இப்போதைய தேவை என்று எழுதப்பட்ட வசனத்துடன் தொடங்குகிறது முதல் பார்வை. தொடர்ந்து,  “நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள்,  சாத்தானின் அடிமைகள் நாங்கள்”,  “இருள் வழிதான் எங்கள் உலகு; அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்” என என கம்பீர குரலில் வசனங்கள் ஒலிக்கின்றன.
சில நொடிகளில்  “நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி” என்ற பஞ்ச் டயலாக்குடன் திரையில் தோன்றுகிறார் அஜித். இறுதியில் ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீயிலிருந்து பைக்கில் வெளியேறுகிறார் அஜித். வாகனம் இரு அடுக்குமாடி கட்டிடத்திற்கும் இடையே வரும்போது அந்த பைக்குடன் அஜித்தும் மறைய, மின்னல் ஒளியில் அஜித் குமார் என ஆங்கிலத்தில் டைட்டில் வருகிறது. பின்னணியில் யுவனின் இசையும் மிரட்டுகிறது. வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை (Glimpse) வெளியாகியுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் இணையத்தில் அதனை கொண்டாடித்தீர்த்து வருகின்றனர்.
Advertisement:
SHARE

Related posts

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்!

Jeba Arul Robinson

தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா!

Jeba Arul Robinson

மதுரையில் 301 பேருக்கு கருப்பு பூஞ்சை