முக்கியச் செய்திகள் தமிழகம்

மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் வாயிலாக சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒருசில இடங்களில் மது விற்பனை மொத்த அளவில் நடைபெறுவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றுள்ளன.

இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக் கூடாது எனவும், டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகம், வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஜீன்ஸ் அணிவது குறித்து தாம் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரிய முதல்வர்

Saravana Kumar

கூகுளுக்கு போட்டியாக விரைவில் வருகிறது Zoom Email…

Jayapriya

10 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும் பேட்டரி: எலக்ட்ரிக் வாகனங்களின் யுகம் தொடக்கம்?

Arun