தமிழ்நாட்டில் இன்று 1,745 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்  துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கர்நாடகத்தில் இருந்து வந்த ஒருவர் உள்பட 1,745 பேருக்கு இன்று…

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்  துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கர்நாடகத்தில் இருந்து வந்த ஒருவர் உள்பட 1,745 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,52,115 ஆக உயர்ந்துள்ளது. 1,624 பேர் இன்று குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்கள் எண்ணிக்கை 25,99,567 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 27 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,427 ஆக உள்ளது. தற்போது 17,121 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை கோவையில் 226, சென்னையில் 222, செங்கல்பட்டில் 107, ஈரோட்டில் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 100 பேருக்கு குறைவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர் 9, திண்டுக்கல் 10, பெரம்பலூர் 6, தென்காசி 6, தேனி 8 என பாதிப்பு பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.