சென்னை விமான நிலையத்தில் சல்யூட் அடித்து சென்ற நடிகர் அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச். வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்குத் தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது.
போஸ்டரில் துப்பாக்கியுடன் அஜித் இருந்த ஸ்டைலான புகைப்படமும், No Guts No Glory என்ற வாசகமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத்தொடர்ந்து நடிகர் அஜித், விமான நிலையத்தில் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் செல்லும் விமானத்தில் அஜித் சென்றார்.
#AjithKumar Sir And @ManjuWarrier4 Mam Today's Video Clip 😍💥#THUNIVU #NoGutsNoGlory pic.twitter.com/62mbjrM4rh
— AJITH FANS COMMUNITY™ (@TFC_mass) September 24, 2022
இவர் பாங்காகில் நடைபெறும் துணிவு படபிடிப்பில் கலந்துகொள்ள சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இவருடன் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் மஞ்சுவாரியரும் விமானத்தில் சென்றார்.
அ.மாரித்தங்கம்