தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.  இவரது நடிப்பில் தற்போது…

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.  இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.  மகிழ்ந்திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்படுத்து வரும் நிலையில் படக்குழு சிறிய இடைவெளி எடுத்துள்ளனர்.  இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில் ,  நடிகர் அஜித் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றே அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.