‘200 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகையினை வழங்க நடவடிக்கை’

2020-2021ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகையாக கடந்த 10 நாட்களில் 183 கோடியே 13 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ஆம்…

2020-2021ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகையாக கடந்த 10 நாட்களில் 183 கோடியே 13 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ஆம் ஆண்டில் தாக்கிய நிவர், புரெவி புயல், 2021ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையினால் தமிழ்நாட்டில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் நஷ்டம் அடைந்த 1 லட்சத்து 15 ஆயிரத்து 947 விவசாயிகளுக்கு கடந்த 10 நாட்களில் மட்டும், 183 கோடியே 13 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை’ – டிஜிபி சைலேந்திர பாபு

இதுவரை தகுதி வாய்ந்த 10 லட்சத்து 89 ஆயிரம் விவசாயிகளுக்கு இரண்டாயிரத்து 285 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகையினை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.