சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம்

சென்னை தீவுத்திடலில் நாளை மாலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி, முதலமைச்சரின் உத்தரவின் பேரின் அனைத்து…

சென்னை தீவுத்திடலில் நாளை மாலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி, முதலமைச்சரின் உத்தரவின் பேரின் அனைத்து துறைகளும் இன்முகத்தோடு பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

மேலும், நாளை மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும் எனவும், திருக்கல்யாண நிகழ்விற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை’ – டிஜிபி சைலேந்திர பாபு

திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தகர்களுக்காக கார் பார்க்கிங், கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 14 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண நிகழ்வில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்த சேகர் ரெட்டி, முதலமைச்சரின் வருகை குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.