சென்னை ஈ.சி.ஆர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
வடமாநிலத்தைச் சேர்ந்த மதுமிதா பைடா என்பவர் சென்னையில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஈ.சி.ஆர் சீ ஷெல் அவென்யூ பகுதியில் நேற்றிரவு மதுமிதா பைடன் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்துப் பணி காவலர் தம்மிடம் அநாகரீகமாகப் பேசி கடுமையாக நடந்துகொண்டதாக மதுமிதா பைடா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விடுவேன் என மிரட்டியதாக குறிப்பிட்டுள்ள அவர், கடற்கரையில் அமர்ந்து பேச நேரம் வரையறுக்கப்படாதபோது, பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அண்மைச் செய்தி: பீஸ்ட் படத்திற்கு தடை கோரும் ஜவாஹிருல்லா
மதிமிதா பைடாவின் இந்த பதிவிற்கு, குறிப்பிட்ட காவலரின் கடுமையான மற்றும் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டிஜிபி சைலேந்திர பாபு பதிலளித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட ரோந்துப் பணி காவலர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








