திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாட வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை குறித்து ஆய்வு நடத்தியதில், திருவண்ணமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசியில் உள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறிப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தேர்வுகள் தொடர்பாக தேர்வுத்துறை அளித்த
வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வனை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள கிருஷ்ணப்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.