முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிளைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ளா அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து அரசு சார்பில் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், அதன் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை என்று குறிப்பிட்டுள்ள அவர், முல்லை பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் தண்ணீர் திறப்பதை வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் கண்டணத்திற்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








