முக்கியச் செய்திகள் கொரோனா

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 376 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்து 91 ஆயிரத்து 516 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும்,கடந்த 24 மணி நேரத்தில் 65 லட்சத்து 27 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

டிசம்பர் இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்

Halley karthi

ஹோலி கொண்டாட்டம்: சன்னி லியோனின் வைரல் புகைப்படங்கள்

Jeba Arul Robinson

ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!