மகாகவி பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் வ.உ.சி.யின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழா, மகாகவி பாரதியாரின் 100வது நினைவு ஆண்டு, நாட்டின் 75 வது சுதந்திர தின விழா ஆகிய முப்பெரும் விழாக்களை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மகாகவியின் எழுச்சி மிக்க பாடல்கள் சுதந்திர போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து இளைஞர்களிடையே தேச பக்தியை ஊக்குவித்தது 1/2.#Bharathiyar pic.twitter.com/IgERI8UcHs
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 11, 2021
மேலும் பாரதியார் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.







