பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை: பிரதமர் மோடி அறிவிப்பு

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை நிறுவப் படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார்தாம் பவனை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து…

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை நிறுவப் படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார்தாம் பவனை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு தங்கும் இடம் அளிக்கும் வகையிலும் சர்தார்தாம் பவன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறந்து விளங்க சர்தார்தாம் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறினார்.

உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதை தமிழார்வலர்கள் வரவேறுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.