முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

குறைந்து வரும் கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 3,451 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபமாக இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமையன்று எடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் புதிதாகத் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 3, 805 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது 3,451ஆக குறைந்துள்ளதால் சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தொற்றினால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,57,495 ஆக உயர்ந்து மொத்தம் 98.74 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களான டெல்லியில் 1,422 பேரும் மகாராஷ்டிராவில் 224 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

பராமரிப்பு பணிக்காக மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!

Jeba Arul Robinson

IPL 2021; தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!

Jeba Arul Robinson

போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

Gayathri Venkatesan