முக்கியச் செய்திகள்

தப்பான விலாசத்துல கேட்கிறீங்க: சீமானை சீண்டும் தருமபுரி எம்.பி.

மின்வெட்டு தொடர்பாக சீமான் மற்றும் அமைச்சர் செந்நில்பாலாஜியின் ட்விட்டர் பதிவுகள் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில்,  தருமபுரி எம்.பி.யின் ட்விட்டர் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக அரசின் ஓராண்டு நிறைவு சாதனை விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான், ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னன்னு பார்க்கலாம்னு பார்த்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அதுதான் பெரியம்மா திராவிட மாடல்.. என்று கிண்டல் செய்திருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்தபோதும் தமிழ்நாடு மின்சார வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு உண்மையிலேயே மின்வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இதைத்தொடர்ந்து, சீமான் பதிவிட்ட மற்றொரு பதிவுக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், தருமபுரி எம்.பி. செந்தில்குமார் சீமான் பேசியதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் பதிவில், அதிபரே உங்களுக்கு என்ன.. என்ன வேண்டுமானாலும் கேட்பீங்க . ஆனா தப்பான விலாசத்துல கேட்கிறீங்க. உங்களுக்குப் படி அளக்க இது உங்க அதிமுகவும் கிடையாது. உங்க பாஜகவும் கிடையாது. இது உடன்பிறப்புகளின் திமுக. ஆமையின் வால் ஒட்ட  நருக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்

திமுக எம்.பி.இன் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

”சசிகலா தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த்!

Jayapriya

விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது

Ezhilarasan

தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

Vandhana