சென்னை அருகே சித்திரை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள வள்ளி, தொய்வானை சமேத வெற்றிவேல் முருகன்
கோயிலில் சித்திரை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் பக்தர் ஒருவரை வேலுடன் அமர வைத்து, இரண்டு பெரிய பாத்திரத்தில், 50 கிலோ மிளகாய்ப் பொடி கரைசலை தயார் செய்து, குடம் குடமாக அவருக்கு அபிஷேகம் செய்து மற்ற பக்தர்கள் வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பால், தயிர், இளநீர் பன்னீரால் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு பெரிய அளவிலான அலகு குத்தப்பட்டது. நாக்கில் வேலும் குத்தப்பட்டது. பக்தியின் உச்சத்தில் இருந்த அந்த பக்தரை, ஏராளமான முருக பத்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படியுங்கள் : அரைசதம் கடந்த ஹர்திக் பாண்டியா! – லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்கு!
தொடர்ந்து, அங்கு கலந்துகொண்ட 2 ஆயிரம் பக்தர்களுக்கு, அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சென்னை அருகே முருக பக்தரை, முருகராக பாவித்து, அவருக்கு குடம் குடமாக மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் செய்து வழிபட்டது, அங்குள்ள பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.







