டெல்லி அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி!

டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவின் சாவியை  ராகுல் காந்தி ஒப்படைத்தார். அத்துடன் ராகுல் காந்தியின் பொருட்களும் பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டன. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள்…

டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவின் சாவியை  ராகுல் காந்தி ஒப்படைத்தார். அத்துடன் ராகுல் காந்தியின் பொருட்களும் பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டன.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி கடந்த 14-ந்தேதி காலி செய்தார்.

இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்த மேஜை, நாற்காலிகள், அலமாரிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இன்று வாகனங்களில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.