சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தளபதி திரைப்படத்தில் ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் போல சிவகார்த்திகேயன் சிகையலங்காரம் இருந்ததால், அவரது ரசிகர்கள் குஷியாகினர்.
இதையும் படியுங்கள் : பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!
இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் ’சீன் ஆ சீன் ஆ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1649752448012259330?t=-ZE-cH81qqMBJ31ZSCnAOw&s=08
படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மாவீரன் படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ரம்ஜான் திருநாளான இன்று, படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் அறிவித்துள்ளது.







