பட்டாசாய் வெடித்த அபிஷேக் சர்மா……. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா…!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான டி 20 தொடர் இன்று தொடங்குகிறது. நாக்பூரில் இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரான ஹார்திக் பாண்டியாவும் 44 ரன்கள் விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமான அளவு உயர்ந்தது.

நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமலாய இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.