கர்நாடகாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ முருகா மடாதிபதி சிவமூர்த்தி முருகா நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சித்ர துர்கா மாவட்டத்தில் ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகாவை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டர்.
https://twitter.com/ANI/status/1565583180845187072
இதையடுத்து, சித்ரதுர்கா மாவட்ட சிறையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







