இந்த புதிய விதிமுறைகள் தமிழ் திரையுலகத்திற்கு எந்த விதமான மாற்றங்களைக் கொண்டுவரும் ?
தென்னிந்தியத் திரைத்துறைகளில் டோலிவுட் என அழைக்கப்படும் தெலுங்கு திரையுலகில் ஒரு வருடத்திற்கு 150ம் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன.
எப்போதும் அதிக சண்டைக் காட்சிகள், அவ்வப்போது கதையில் குறுக்கிடும் பாடல்கள் என தனி பாணியை வைத்துள்ளனர். டோலிவுட் படங்களில் ஹீரோக்களையே முழுவதும் மையப்படுத்தும் வகையான கதைகளையே நாம் பெரும்பாலும் காண முடியும்.
இந்த நிலையில் நாயகனை மையமாகக் கொண்டு வெளியாகும் திரைப்படங்களுக்கான மவுசு குறைந்து, இப்போது கதைக்கான முக்கியத்துவமுள்ள படங்கள் ஹிட்டடிக்க ஆரம்பித்துள்ளன. தெலுங்கு திரைத்துறையிலும் இந்த நிலை ஏற்பட்டதால் தெலுக்கு திரைத்துறையில் பல புதிய நெறிமுறைகளைக் கெண்டு வந்துள்ளனர். குறிப்பாக நடிகர்களின் ஊதியம் குறித்த பல புதிய நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளனர்.
கலைஞர்களுக்கு அவர்கள் படத்தின் பணிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு நாளும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதன் பின் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்பட வேண்டும். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அனைத்து வகையான கட்டணங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் முடிக்கப்பட வேண்டும். படத்தில் இடம் பெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஊதியம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் முன்கூடியே உறுதிப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மேலும், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் கட்டாயமாகக் குறைந்தது 8 வாரங்கள் திரையிடப்பட வேண்டும். குறிப்பாகப் படங்களின் அறிவிப்பின் போது செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் பார்ட்னர் விவரங்களை அறிவிக்கக் கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளனர். இந்த புதிய நெறிமுறைகளை இந்த செப்டம்பர் 10 முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஓடிடி வருகையால் மக்களிடம் ரசனை மாற்றம் ஏற்பட்டிருப்பது ஒருவகையில் நன்மையாக இருந்தாலும், ரசிகர்கள் பகிரங்கமாக வெளிநடப்பு செய்வதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் டிஜிட்டல் தொடர்பான புதிய விதியை வகுத்துள்ளனர். இந்த புதிய மாற்றங்கள் பான் இந்திய படங்களாக வெளியாகும் படங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் தெலுங்கிலும் வெளியாகும் என்பதால் எந்த விதமான மாற்றங்களைத் தமிழ் திரையுலகத்திற்குக் கொண்டுவரும் என்பத்தைப் பெருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
-செ.யுதி







