முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

வாரிசு போஸ்டர் டீக்கோட்: ஒரே படத்துக்குள்ள இத்தனை படங்களா?


ஆண்ட்ரூ ஜான் 

கட்டுரையாளர்

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் look போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளே தளபதி 66வது படத்தின் பெயரையும் first look போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. இதனைத்தொடர்ந்து second மற்றும் third look-ஐயும் வெளியிட்டது படக்குழு. சும்மாவே விஜய்யின் படங்களுக்கும், போஸ்டர்களுக்கும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனா இந்த படத்திற்கோ “வாரிசு” எனும் தலைப்பில் இருந்தே troll-களையும் விமர்சனங்களையும் தொடங்கிவிட்டனர். விஜய் அணிந்திருந்த கோட்டில் இருந்தே தொடங்கிய நெட்டிசன்கள் தனியார் ஜவுளிக்கடை நிறுவனத்தின் விளம்பரம் போல photoshop செய்து இணையத்தில் பரவ விட்டனர். மேலும், ரஜினி நடித்த “அடுத்த வாரிசு” திரைப்படத்தின் பெயரை ஒப்பிட்டு இவர்தான் அந்த வாரிசு போல என கலாய்த்ததோடு பாண்டியராஜனின் புது வாரிசு போஸ்டரை போட்டும் பொளந்து கட்டினர். அதுமட்டுமின்றி firstlook புகைப்படத்தின் பின்னால் இருந்த கட்டிடத்தின் original புகைப்படத்தை நெட்டில் தோண்டியெடுத்த நெட்டிசன்கள், புதிதாக ஒரு டிசைன் உருவாக்கக்கூட நேரமில்லையா எனவும் fan made poster கூட இதைவிட better-ஆக இருக்கும் எனக்கூறி தாளித்துவிட்டனர்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் official-ஆக அறிவிப்பதற்கு முன்பே படத்தின் தலைப்பு தெலுங்கில் வார்சுடு எனவும் தமிழில் வாரிசு எனவும் இருக்கலாம் என்ற தகவல் பரவியிருந்தது. அது மெய்யானவுடன் பாதி தரப்பினர் மகிழ்ச்சியாகவும் மீதி பேர் கலாய்க்கவும் செய்தனர். இந்நிலையில் இதுவரை வெளியான மூன்று போஸ்டர்களையும் ஒவ்வொன்றாக பிரித்து பார்ப்போம்.


முதல் போஸ்டர்

மூன்று போஸ்டர்களிலும் பொதுவான ஒன்று படத்தின் பெயரான, “வாரிசு ” அல்லது “வார்சுடு”. அந்த பெயரை ஜூம் செய்து பார்த்தோம் என்றால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட வைரக்கற்கள் போன்று தெரிகிறது. விஜய் அணிந்திருக்கும் கோட் – சூட், 10 அடுக்குமாடி அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டது போல் தெரியும் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம், கையில் கட்டி இருக்கும் விலை உயர்ந்த கைக் கடிகாரம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது அவர் சர்கார் படத்தில் வருவதுபோலான ஒரு ” CORPORATE CRIMINAL ” என்பது தெரியவருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி படத்தின் டைட்டிலுடன் ” தி பாஸ் ” என்ற துணை டைட்டிலும் வரும். அதைப்போலவே “வாரிசு THE BOSS RETURNS ” என பெயரிடப்பட்டிருப்பது ரஜினியின் அடுத்த அவதாரம் விஜய் என நேரடியாக கூறுவது போல் மறைமுகமாக தெரிகிறது. மேலும், அவர் கையில் கட்டி இருக்கும் கடிகாரமும் மணி 6.01 என காட்டுகிறது. நிஜவாழ்விலும் விஜய், ரஜினியை போன்றே நேரம் தவறாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆக காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது எனும் பழமொழிக்கேற்ப நேரத்தை சரியாக உபயோகித்து நேர்மையாக இருந்து தொழிலில் முன்னேறியவர் இந்த ‘பாஸ்’ எனவும் பொருள் எடுத்துக்கொள்ளலாம் போலும்.


இரண்டாவது போஸ்டர்

இரண்டாம் போஸ்டர் தான் பல படங்களின் கலவையாக தெரிந்தது. பொதுவாக ஒரு படத்தின் கதை அல்லது திரைக்கதை அல்லது சில காட்சிகள் தான் பிற படங்களின் சாயலில் இருக்கும். இங்கு ஒரு போஸ்டரே பல படங்களுடைய STILLகளின் கலவையாக உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.

போஸ்டரை கொஞ்சம் அக்கக்காக பிரித்து பார்ப்போமே! இதில் சந்தைக்கு காய்கறி ஏற்றிச்செல்லும் ஒரு வண்டியில் விஜய் படுத்திருப்பது போல தெரிகிறது.. அவ்வளவுதானே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் பல சம்பவங்களும் சரித்திரங்களும் அதில்தான் குடிகொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுது நம் நினைவிற்கு வருவது இன்றைய ஜெயிலரும் அன்றைய மனோ தத்துவ நிபுனருமான ரஜினிகாந்த் தான். சந்திரமுகி படத்தின் intro காட்சியில் ரஜினியும் மாட்டு வண்டியில் இதேபோலான போஸில் தான் entry கொடுப்பார். அதன் கார்பன் காப்பி அல்ல கலர் PRINTOUT எடுத்தாற்போல் தான் இருக்கிறது இந்த விஜயின் POSE. என்ன ஒரு பெரிய வித்தியாசம் என்றால் அதில் புல்லுக்கட்டு மட்டும் இருக்கும். இதிலோ கட்டு காட்டாக கூடை FULLஆக படத்திற்கு பூஜை போட்ட சாமானெல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

இதில் சோளம், கரும்பு, இளநீர், பூசணி, வெங்காயம், வாழை, முருங்கை என மினி ஸ்நாக்ஸ் STALL வைக்கும் அளவிற்கு வண்டி நிறைய சரக்கு இருக்கிறது. இதனை ரெண்டு வகையாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதால் பொங்கல் பண்டிகை கொண்டாட இதனையெல்லாம் வாங்கிச் செல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இந்த காட்சியே அவரது Entry scene ஆக கூட இருக்கலாம். மற்றொன்று வெளிநாட்டிலிருந்து தனது சொந்த ஊருக்கு வரும் வாரிசு விஜய் தனது கிராமத்திற்கு அந்த வண்டியில் பயணிப்பவராக கூட இருக்கலாம். இந்த செகண்ட் லுக்கில் அவர் அணிந்திருக்கும் கை கைக்கடிகாரம் FIRSTLOOKஇல் இருந்தது அல்ல. முன்னது PROFESSIONAL WATCH, இது CASUAL WATCH. கவுண்டமணி செந்தில் காமெடி போல் இருவரும் ஒன்றுதான் ஆனால் கட்டிருந்த வாட்ச் தான் வேறு. கத்தி திரைப்படத்தில் விவசாயிகளின் விடிவெள்ளியாக வருவார் விஜய்.

வாரிசுவில் அந்த SHOEவை கொஞ்சம் கழட்டி விட்டு அங்கு இருக்கும் இயற்கை பொருட்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்திருக்கலாம், மற்றபடி செகண்ட் லுக் MASS.
மேலும் இந்த போஸ்டரில் பாபா பட ‘காத்தாடி’, அண்ணாமலை ‘சைக்கிள்’, பாஷா மாணிக்கத்தின் ‘பூசணிக்காய்’, என பல ரஜினி ரெபரென்ஸ்களுடன் ரஜினிக்கு உரிய மாஸுடன் இருக்கிறது இந்த second look. இதையெல்லாம் தாண்டி தன்னோட படத்துல இருந்தே சில ஸ்பேர் பார்ட்ஸை கடன் வாங்கி வந்துள்ளார் விஜய். நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற “பீஸ்ட்” திரைப்படத்தில் வரும் பஞ்சுமிட்டாயையும், அதில் ஒரு குழந்தைக்கு வாங்கித்தரும் பலுனையும் அப்படியே கொண்டுவந்து இந்த போஸ்டரில் வைத்துள்ளார்கள்.

மூன்றாவது போஸ்டர்

இப்போது வாரிசுவின் 3வது போஸ்டருக்கு வருவோம். இதில் விஜய் அமர்ந்துள்ளது Yezdi Adventure மாடல் பைக். சென்னையில் இதன் ON ROAD PRICE ₹ 2,41,914. இது Matte – Slick Silver, Matte – Mambo Black, Camo – Ranger Camo என மூன்று வண்ணங்களில் வருகிறது. இதில் விஜய் வைத்திருப்பது Matte – Slick Silver. இதன் ENGINE 334 CC, SINGLE CYLINDER, 4 STROKE, LIQUID COOLED, DOHC. இதன் அதிகபட்ச சக்தி 30.20 PS, மொத்த எடை 188 KG. பெட்ரோல் CAPACITY 15.5 லிட்டர்; 6 கியர் உள்ளது.

அந்த வண்டியின் முன் கட்டிவைத்துள்ள அலங்கார திபெத்தியன் கொடி அவரை ஒரு பைக் பயண பிரியராக காட்டுகிறது. “மாறா” திரைப்படத்தில் கதாநாயகி தொலைதூரம் பயணிக்க ஆசைப்படுவது போல் தளபதி விஜய் ஆசைப்படாமல் இருந்தால் நலம். இந்த போஸ்டரில் பின்புறம் இருக்கும் மலை முகடுகள், Long travel பைக், திபெத்திய கொடி இதை எல்லாம் வைத்து பார்க்கும்பொழுது.. “தெறி” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் விஜய்யும் தனது மகளும் ஜம்மு காஷ்மீரில் இருப்பார்கள் அல்லவா அங்கிருந்து படம் ஆரம்பிக்கிறதோ எனவும் எண்ணங்கள் எழுகிறது. லோகி சினிமாடிக் யுனிவர்ஸ் போல இது விஜய் சினிமாடிக் யுனிவர்ஸாக இருக்கலாம்.விஜய் பயணிக்கும் வாகனங்களில் REGISTRATION NUMBER எதுவும் தென்படவில்லை என்பதால், இப்படத்திற்கான கதைக்களத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக இந்த மூன்று போஸ்டர்களையும் சுருக்கமாக அலசி ஒரு கணிப்பிற்கு வருவோம். “சர்கார்” திரைப்படத்தில் வரும் விஜய் போன்ற ஒருவர், “காப்பான்” பட சூர்யா போல் விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென தனது வேலையை விட்டுவிட்டு “கத்தி” திரைப்பட விஜய் போல் Corporate வில்லனை “ஆக்க்ஷன்” திரைப்பட விஷால் போல் வடநாட்டிற்கு சென்று அழிக்க “வலிமை” அஜித் போல் பைக்கில் சென்று “துப்பாக்கி” CLIMAX போல் வெடிவைத்து கொன்று விட்டு தாயகம் திரும்பும் AGENT விஜய்யாக கூட இருக்கலாம்.

கட்டுரையாளர்  – ஆண்ட்ரூ ஜான் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’இந்தியன் 2’ பிரச்னை: சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி !

Halley Karthik

களக்காடு அருகே ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Arivazhagan CM

புதிய ரக ஏவுகணை: சோதனை வெற்றி

Halley Karthik