கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இளம் பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி . இவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உறவினர் என்று கூறி வந்துள்ளார். இதனால் தன்னால் அரசில் எந்த வேலையாக இருந்தாலும் வாங்கி தர முடியும் என கூறியதை நம்பி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தராததோடு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே கரூர் காந்திகிராமம் பகுதியில் சௌமியா இருப்பது தெரியவந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சத்தை ஏமாற்றி உள்ளார். மேலும் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பணத்தை ஏமாற்றி தலைமறைவு வாழ்க்கையில் இருந்துள்ளார். அமைச்சரின் உறவினர் என கூறியதால் நாங்களும் ஏமாந்து பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தோம் என்றும், ஆனால் வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார் என வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிடிபட்ட சௌமியாவிடம் கரூர் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.