புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் ஆளும் தேசிய ஜனநயக குட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
அதன் படி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 4, எல்ஜேகே, அதிமுக ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 15 இடங்கள் தேவைப்படும் நிலையில் தே.ஜ.கூட்டணி
மறுபுறம் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 1 தொகுதியிலும், திமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேலும் தவெக 2 தொகுதிகளிலும், நேயம் மக்கள் கழகம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன. 3 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
இதனை தொடர்ந்து புதுச்சேரியின் முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று பதவியேற்கிறார். லோக் நிவாசில் (ஆளுநர் மாளிகை) நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மேலும் ரங்கசாமியுடன் பாஜகவின் நமச்சிவாயம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.







