கேரளாவில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பயணியின் காரை வழிமறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் இடிக்கியில் திடீரென காரை வழி மறித்து சென்ற காட்டு யானை
கூட்டத்தால் காரில் இருந்து பயந்து நடுங்கிய குடும்பத்தினர்,அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பிய நிலையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கேரளாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மலைப் பகுதிகளுக்கு செல்லும்போது வன விலங்குகள் தாக்குவது, துரத்துவது, காரை வழிமறிப்பது போன்றவை தொடர் கதையாகி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கேரளாவின் இடிக்கி அருகே கன்னிமலை பகுதியில் திடீரென காரை வழி மறித்து சென்ற காட்டு யானை கூட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் வெளியில் சென்று விட்டு எஸ்டேட் பகுதி வழியாக இரவு வீட்டுக்கு திரும்பும் போது இந்த சம்பவம் நிகழவே காரில் இருந்து பயந்து நடுங்கினர்.
தொடர்ந்து யானைகள் அதன் வழி தடத்தில் ஒன்றும் செய்யாமல் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது.







