தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை நிலவரம், சந்தை நிலவரம் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளை கொண்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும் என அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இந்த குழுவில் அனைத்து குக்கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் உறுப்பினர்களாக இணைக்கப்படுவார்கள் எனவும், இதன் ஒருங்கிணைப்பாளராக வட்டார வேளாண்மை உதவி இயக்குநரும், தோட்டக்கலை உதவி இயக்குநரும் செயல்படுவார்கள் தெரிவித்தார்.
அண்மைச் செய்திகள்: விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!
இந்த வாட்ஸ் ஆப் குழுவின் மூலமாக விவசாயிகள், தங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள், பூச்சி-நோய் தாக்குதல் போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
வட்டார குழுக்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் உருவாக்கப்படும் எனவும் வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில அளவில் செயலாற்றும் விளம்பரப்பிரிவு அனுப்பி வைக்கும் தகவல்கள் உடனடியாக வட்டார அளவில் உள்ள விவசாயிகள் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா