வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த காய்கறி வியாபாரி; போலீசாரிடம் பிடித்து கொடுத்த பொதுமக்கள்

சிவகாசியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட காய்கறி வியாபாரி. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வியாபாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாட்டக்குளத்தை சேர்ந்த தங்கரத்தினம் மொச்சைக்காய்…

சிவகாசியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட காய்கறி வியாபாரி. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வியாபாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாட்டக்குளத்தை சேர்ந்த தங்கரத்தினம் மொச்சைக்காய் வியாபாரம் செய்து வருகிறார் நேற்று பழனியாண்டவர் காலனியை சேர்ந்த வசந்தா தேவி என்ற மூதாட்டியிடம் மொச்சைக் காய் வியாபாரம் செய்துள்ளார்.

அப்போது வாங்கிய பொருளுக்கான பணத்தை எடுக்க மூதாட்டி எடுக்க வீட்டிற்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற வியாபாரி தங்கரத்தினம் வீட்டின் கதவை சாத்திக்கொண்டு அவர் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.

மூதாட்டியும் செயினை பறிகொடுக்காமல் போராடிய நிலையில் சப்தம் கேட்டு அக்கம்
பக்கத்தினர் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்ததை கண்டு
அதிர்ச்சியில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து
செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற தங்கரத்தினத்தை சிவகாசி கிழக்கு காவல் நிலைய
போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து
இருசக்கர வாகனத்தில் இரு காவலர்கள் அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில்
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் மீண்டும் காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது தங்கரத்தினம் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்ப முயன்ற போது அவரை போலீசார் விரட்டி பிடித்தனர். இதில் தப்ப முயன்ற கைதிக்கு படுகாயம் ஏற்பட்டு தற்பொழுது சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வியாபாரத்திற்கு செல்லும் போது வீட்டில் தனியாக உள்ள மூதாட்டியை குறிவைத்து
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது செயின் பறிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.