சென்னை : சுதந்திர தினவிழா முடித்து வீடு திரும்பிய பள்ளி மாணவி அரசுப்பேருந்து மோதி உயிரிழப்பு

சென்னையில் சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற பிறகு வீடு திரும்பிய பள்ளி மாணவி அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி லட்சுமிஸ்ரீ. இவர் குரோம்பேட்டையில் உள்ள…

சென்னையில் சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற பிறகு வீடு திரும்பிய பள்ளி மாணவி அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி லட்சுமிஸ்ரீ. இவர் குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடி விட்டு சக மாணவிகளுடன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

 

அப்போது, அஸ்தினாபுரம் அருகே வந்து கொண்டிருந்த மாணவியின் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தின நிகழ்ச்சிக்காக சென்று வீடு திரும்பிய போது மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.