சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய முதலமைச்சர்

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் விருது பெற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு குறித்து இந்த பதிவில் காணலாம். நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று…

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் விருது பெற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு குறித்து இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றப்பட்டு தகைசால் தமிழர் விருது, அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, மாநில இளைஞர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்தவுடன் விருது பெற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், தகைசால் தமிழ் விருது பெற்றது பெருமைக்குரிய விஷயம். முதலமைச்சர் கொடுத்த 10 லட்சம் ஆனது எனக்கு தேவைப்படாது. அதனுடன் என்னிடம் இருந்து 5000 சேர்த்து 10 லட்சத்து 5 ஆயிரத்தை உதவிக்காக முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு கொடுத்தது நன்றிக்குரியது என்று கூறினார்.


கல்பனா சாவ்லா விருது பெற்ற எழிலரசி கூறுகையில், கோயிலுக்குச் சென்றபோது குளத்தில் வழுக்கி விழுந்து தவித்தவர்களை பிடித்து இழுத்து மீட்க முயற்சி செய்தேன். எனக்கும் நீச்சல் தெரியாது. ரொம்ப நேரம் 2 பசங்களையும் பிடித்துக் கொண்டே இருந்தேன். இதைப்பார்த்த ஊர்மக்கள் வந்து எங்களை காப்பாற்றினர் என கூறினார்.

அப்துல் கலாம் விருது பெற்ற இகனாசிமுத்து கூறுகையில், இதுவரை நான் செய்த ஆய்வுகாகவும், அறிவுசார்ந்த கட்டுரைக்காகவும் இந்த விருதினை எனக்கு தமிழக அரசு அளித்துள்ளது. இந்த விருது பள்ளி மாணவர்களை ஊக்கும்விக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது இதற்காக தமிழக முதல்வர்க்கு நன்றி என தெரித்தார்.


தொடர்ந்து மாநில இளைஞர் விருது பெற்ற சிவரஞ்சனி கூறுகையில், இந்த விருதை பெரும் அங்கீகாரமாக பார்க்கிறேன். 2015 முதல் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகிறேன். வருங்கால சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக இந்த முயற்சியை நான் மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்.

மாநில இளைஞர் விருது பெற்ற முகமது ஆசிக் கூறுகையில், ஜீவா சாந்தி அறக்கட்டளை என்ற பெயரில் இந்து, கிறிஸ்டின், முஸ்லிம் மத நண்பர்களும் இணைந்து கோவை மாவட்டம், நீலகிரி மாவட்ட பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற சடலங்களை எடுத்து நல்லடக்கம் செய்து இதுவரை 12000-க்கும் மேற்பட்ட சடலங்களை எடுத்து நல்லடக்கம் செய்ததற்காக மாநில இளைஞர் விருது பெற்றிருக்கிறேன். இந்த விருதினை வழங்கி இருக்கும் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி என கூறினார்.

இளைஞர் விருது பெற்ற விஜயகுமார் பேசுகையில், உக்ரைன் போரின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டேன். விருதுக்காக எதையும் செய்யவில்லை. இந்த விருது தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். முன்னாள் மாணவர்கள் இணைந்து தமிழக மாணவர்களுக்கு உதவிகள் மேற்கொண்டோம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.