ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அரிய வகை ஆந்தை, மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல் நலம்
பாதிக்கப்பட்ட நிலையில் அரிய வகை ஆந்தை ஒன்று இருந்தது. இதை அடுத்து, வட்டாட்சியர் அலுவலர்கள் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில், நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கிருந்த அரிய வகை ஆந்தையை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஆந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அரிய வகை ஆந்தை வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
—ம. ஸ்ரீ மரகதம்







