கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த வீரவாஞ்சி 9வது தெருவில், சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத் தொழிற்சாலையில் அதிகப்படியான புகை மூட்டம் எழுந்துள்ளது. இதையடுத்து தொழிற்சாலையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்துது.
இதனைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இதில் ஆலையில் இருந்த தீ குச்சி எந்திரம் , மின்சார பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இதை அடுத்து இச் சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
—கோ. சிவசங்கரன்.







