முக்கியச் செய்திகள் குற்றம்

திருத்தணியில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை

திருத்தணியில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜெ.ஜெ.நகர்ப் பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினரான மோகன், நேற்று இரவு 10 மணியளவில் வெளியிலிருந்து, வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது இவரது பின்னால் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் இவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அப்போது உயிருக்குப் போராடி வந்த அந்த சூழ்நிலையில் அந்த பகுதி வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர், அங்கிருந்த பொதுமக்களுக்கும், மோகன் உறவினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி திருத்தணி அரசு மருத்துவமனையில் மோகன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகன் கொலைக் குற்றத்திற்குக் காரணமான கொலையாளிகளைத் திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘சீன கப்பல் வருகைக்கு எதிர்ப்பு – இந்தியாவுக்குச் சீனா கண்டனம்’

திமுக பிரமுகர் உயிரிழப்பு திருத்தணி அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த கொலைக்குத் தொடர்புடையவர்களைப் பிடிப்பதற்கு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். உயிரிழந்த மோகன் மீது மதுபான விற்பனை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.950 கோடி நிதி தேவை“ – அமைச்சர்

Halley Karthik

அம்மாவின் திறமையை பகிர்ந்து, நம்மை குழந்தையாக மாற்றிய மஹுவா மொய்த்ரா MP – வைரல் வீடியோ

Web Editor

தமிழகத்தின் எதிர்காலத்தை மீட்கும் தேர்தல் நடைபெறவுள்ளது: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi