முக்கியச் செய்திகள் விளையாட்டு

வண்ணமிகு வாணவேடிக்கைகளுடன் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு!

பர்மிங்காமில் நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் வண்ணமிகு வாணவேடிக்கை மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கியது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

4வது இடத்தில் இந்தியா

இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என 178 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் என 176 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், கனடா 26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா  22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

4 பதக்கம் வென்று சாதனை

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 40 வயதாகும் சரத் கமல் தற்போதும் கூட இளம் வீரர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் முதலில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா-வுடன் இணைந்து மற்றொரு தங்கமும் வென்றார். இதை தொடர்ந்து இன்று இறுதியாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அவர் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டிகளில் மட்டும் 3 தங்கம், 1 வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

பி.வி.சிந்து

பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து கனடா வீராங்கனை மிச்செல் லியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் இது அவரின் 2வது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இளம் துப்பாக்கி லக்ஷ்யா சென் தங்கப் பதக்கங்களை கைப்பற்றி எதிர்பார்ப்புகளை ரசிகர்களின் நிறைவேற்றினர். இதன் மூலம் இந்தியா ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

நிறைவு விழா

இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார். அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.

பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றன. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியகொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீரர் நிகத் ஷரீன் ஆகியோர் ஏந்தி இந்திய அணியை வழிநடத்தி சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரல்!

Web Editor

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்

G SaravanaKumar

ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்!

Halley Karthik