முக்கியச் செய்திகள் தமிழகம்

பிளாஸ்டிக் இல்லா கடற்கரை; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை

மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாகப் பராமரிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, 28 வகையான பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம்
விதிக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் மெரினா பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பொதுமக்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு வந்து செல்கின்றனர். சென்னை மெரினா கடற்கரை உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை சென்னைக்கு வருகை தரும் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மெரினா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.

அந்தவகையில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான வியாபாரக்கடைகளும் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும் அதைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரையில் தூக்கி எறிவதாலும் அல்லது விட்டுச் செல்வதாலும், கடலில் கலந்து கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சாப்பில் ஏற்கனவே அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அண்மைச் செய்தி: ‘விருப்ப ஓய்வு விவகாரம்; கனரா வங்கி உத்தரவு சரியானது – சென்னை உயர் நீதிமன்றம்’

இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாகப் பராமரிக்கும் வகையில் இன்று முதல் மாநகராட்சியின் சார்பில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அதிகபட்ச அபராதமும்
விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். மெரினா கடற்கரையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 65 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுத் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 14 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Gayathri Venkatesan

இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைக்குமா நாராயணசாமி அரசு?

Gayathri Venkatesan