ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!

குரங்குகளே இல்லாத ராமநாதபுரத்திற்கு திடீரென ஜோடி குரங்குகள் என்ட்ரி கொடுத்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் குரங்குகளை பார்த்து ரசித்தனர்.  ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென இரண்டு குரங்குகள் உலா வந்தது.  அந்த இரண்டு…

குரங்குகளே இல்லாத ராமநாதபுரத்திற்கு திடீரென ஜோடி குரங்குகள் என்ட்ரி கொடுத்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் குரங்குகளை பார்த்து ரசித்தனர். 

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென இரண்டு குரங்குகள் உலா வந்தது.  அந்த இரண்டு குரங்குகளும் நீதிமன்ற வளாகத்தில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது.  இதனைதப் பார்த்த வழக்கறிஞர்கள், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களும் இரண்டு குரங்குகளையும் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.மேலும் அந்த இரண்டு குரங்குகளும் இணைபிரியாமல் பாசத்தோடு விளையாடியதையும்,  மனிதர்கள் போல் பேன் பார்த்ததையும் அந்த பகுதிக்கு வந்த அனைவரும் பார்த்து ரசித்தபடி சென்றனர்.  குரங்குகளே இல்லாத ராமநாதபுரத்திற்கு திடீரென ஜோடி குரங்குகள் என்ட்ரி கொடுத்ததால் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் பார்த்து ரசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.