சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

விளாத்திகுளம் அருகே மாணவனிடம் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் பேசிய விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர்…

விளாத்திகுளம் அருகே மாணவனிடம் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் பேசிய விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவரிடம் சாதி ரீதியாகப் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனைத் தொடர்ந்து, ஆடியோ தொடர்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகியோரிடம் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பலதண்டாயுதபாணி விசாரணை மேற்கொண்டார்.

அண்மைச் செய்தி: ‘பொதுத்தேர்வுகள் முடிவுகள் – தேதி மாற்றம்; தள்ளிப்போகிறது 10ம் வகுப்பு முடிவுகள்’

அந்த விசாரணை முடிவில், சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனாவைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடம் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே சாதி ரீதியாகப் பேசிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.