திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?

திருமணமான பெண், திருமணமாகாத பெண் மற்றும் ஆண் எவ்வளவு தங்கத்தை இருப்பாக வைத்திருக்கலாம் என அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்தியாவில் பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளாக…

திருமணமான பெண், திருமணமாகாத பெண் மற்றும் ஆண் எவ்வளவு தங்கத்தை இருப்பாக வைத்திருக்கலாம் என அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்தியாவில் பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர குடும்பங்கள், பணக்கார குடும்பங்கள் வரை தங்கத்தை வாங்கிய சேமிக்கும் ஒரு சிஸ்டம் இந்தியாவில் உள்ளது.

அதிகமான முதலீடுகள் தங்கம் மற்றும் நிலத்தின் மீதுதான் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படி முதலீடு செய்யப்பட்ட தங்கம் பல குடும்பங்களின் அவசர தேவைகள், மருத்துவம், கல்வி போன்ற தேவைகளுக்கு பயன்படுகின்றன. World Gold Council  2022ன் கணக்கின்படி தங்கத்தை கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தங்கம் கொள்முதல் அளவு 2022ல் மட்டும் 31.25 டன் அளவாகும்.

பெண்களுக்கான தங்கத்தின் அளவுகள் : 

பெண்களில் திருமணமான பெண்ணாக இருந்தால் 500 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். திருமணமாகாத பெண்ணாக இருந்தால் 250 கிராம் தங்கம் வைத்திருக்கலாம். இதற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் தங்கத்திற்கான வரி செலுத்த வேண்டும் என இந்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

 ஆண்களுக்கான தங்கத்தின் அளவு : 

குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் அதிகபட்சமாக 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

என்ன மாதிரியான வரி விதிக்கப்படும்..?

தங்கத்தை வாங்கும் போது விவசாயம், சிறு சேமிப்பு மற்றும் சட்டப்பூர்வமான வாங்கினால் அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது. தங்கத்தை வாங்கும்போது மூன்று வருடங்களுக்குள் விற்கும் நோக்கத்துடன் வாங்கினால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியும், மூன்று வருடங்களுக்கு பிறகு விற்கும் நோக்குடன் வாங்கினால் அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியும் விதிக்கப்படும்.

தங்கத்தினை விற்பனை செய்யும் லாபத்தின் மூலம் கிடைக்கும் தொகையில் 20 சதவிகிதம் மற்றும் 4 சதவிகிதம் செஸ் வரி என வரிகள் விதிக்கப்படும் என மத்திய அரசின் நேரடி வரிகளை வசூலிக்கும் வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.