பசுபதீஸ்வரர் கோவிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்த சண்டிகேஸ்வரர்

கரூர் பசுபதீஸ்வரர் சிவ ஆலயத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உலா வந்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். கரூர் மாநகரில் கல்யாண பசுபதீஸ்வர் கோவில் என்பது கரூருக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவ ஆலயமாகும்.…

கரூர் பசுபதீஸ்வரர் சிவ ஆலயத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உலா வந்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

கரூர் மாநகரில் கல்யாண பசுபதீஸ்வர் கோவில் என்பது கரூருக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவ ஆலயமாகும். இவ்வாலயம் தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது ஒன்று ஆகும். மேலும் இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும், இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர் மற்றும் இங்கு சித்தர் கருவூராருக்கு தனி ஆலயம் உண்டு என்பது சிறப்பு வாய்ந்தது.

கரு சிவ ஆலயத்தில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வந்தது. இதில் 13-ம் நாள் நிகழ்வாக 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு சண்டிகேஸ்வர பெருமாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்றது. சண்டிகேஸ்வரருக்க மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் சிவாச்சாரியார்கள், ஏராளமான பொதுமக்கள் உட்பட கலந்துக்கொண்டனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.