மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்காக கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்க உள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி அன்று கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் அம்மனும், சுவாமியும் நான்கு மாசி வீதிகளிலும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 30 பட்டாபிஷேகம், மே 1- திக்குவிஜயம், மே 2- திருக்கல்யாணம், மே 3- தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதே போன்று கள்ளழகர் கோவிலில் மே 4- இரவு கள்ளழகர் எதிர்சேவையும், மே 5- அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அப்பந்தல் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்வு மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து யானை, காளைகள் முன் செல்ல கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நடைபெற்றது. பின்னர் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
—அனகா காளமேகன்