முக்கியச் செய்திகள் குற்றம் செய்திகள்

மெரினாவில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு

சென்னை மெரினா கடற்கரையில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் பத்திரமாக மீட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்ட மின் கம்பம் ஒன்றில் ஒரு நபர் ஏறினார். அந்த நபர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாண கோலத்தில் இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் அருகில் இருந்த மீனவ குப்பத்தை சேர்ந்தவர்கள் அவரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அவர் யார் சொல்வதையும் கேட்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினர் உயர் கோபுர மின் கம்பத்தைச் சுற்றி வலையை கட்டி அந்த நபர் கீழே தவறி விழுந்தாலும் காயம் ஏற்பாடதபடி மீட்க தயாரானார்கள்.

போலீசாரும் அந்த நபரிடம் என்ன கோரிக்கை, இறங்கி வாருங்கள் என்று மைக் வாயிலாக அறிவுறுத்தினர். ஒன்றும் பேசாமல் இருந்த நபர் சிறிது நேரம் கழித்து சத்யா நகர் பெண் காவல் உதவி ஆய்வாளர் இந்த இடத்திற்கு வந்து தன்னை இறங்கச் சொன்ன பின்னரே இறங்குவேன் என்று கூறினார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் வரவழைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் தரணி, உயர் கோபுர மின் கம்பத்தில் இருந்த நபரை கீழே இறங்கச் சொன்னார். இதையடுத்து அந்த நபர் உடையை அணிந்து கொண்டு கீழே இறங்கத்தொடங்கினார். கீழே இறங்கி வந்த அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிற்பகலில் தொடங்கி மாலை வரை அந்த இளைஞரை மீட்கும் முயற்சி தொடர்ந்ததால் அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளாமானோர் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:

Related posts

“அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது” – சென்னை உயர்நீதிமன்றம்!

Halley karthi

குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்

எல்.ரேணுகாதேவி

“விவாதிக்க துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா?”- மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!

Jayapriya