கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸுக்கு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வழி விடாமல் சொகுசு கார் ஒன்று சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாலுச்சேரி தாலுகா அரசு மருத்துவமனையில்
இருந்து கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு
நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற சொகுசு கார் சுமார் நான்கு கிலோ மீட்டர்
தூரம் வரை வழி விடாமல் சென்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பியும் அந்த காரில் சென்றவர் வழிவிடவில்லை. இது தொடர்பான சொகுசு காரின் வீடியோ வைரலாகி வருகின்றன,
ஆம்புலன்ஸ்விரைந்து செல்லும் நிலையில் ஹாரன் அடித்தும் சொகுசு கார் வழி விடாமல் சென்ற காட்சி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சொகுசு கார் குறித்தும் ஓட்டுநர் குறித்தும் போலிசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







