சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்தானது கடந்த ஆண்டுகளை விட விற்பனையும், விலையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மாம்பழ…

சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்தானது கடந்த ஆண்டுகளை விட
விற்பனையும், விலையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மாம்பழ சீசனும் தொடங்கி உள்ளது. சென்னையைப் பொறுத்த வரை பிரதான பழ சந்தையாக இருக்கக்கூடிய கோயம்பேடு பழ சந்தையில் மாம்பழம் விற்பனை மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாகவே, பிப்ரவரி 15 ஆம் தேதி போல் தொடங்கும் மாம்பழ சீசன் ஜூலை 15 ஆம்
தேதி வரை இருக்கும்.மாம்பழங்களில் அல்போன்சா, இமாம் பசந்த், மல்கோவா மாம்பழம் உள்ளிடவை சீசன் தொடங்கியதும் முதலில் வரத் தொடங்கும்.

சேலத்தில் தொடங்கி கேரளா பாலக்காடு வரை உள்ள பகுதிகளில் இருந்து மாம்பழங்கள்
விற்பனைக்கு வரும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாம்பழங்கள் வரத்து குறைவாக உள்ளது. சேலத்தில் விளையும் அல்போன்சா மாம்பழம், இமாம் பசாந்த் உள்ளிட்ட முதல் தர மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவில் விளையும் பங்கனபள்ளி மாம்பழங்கள் சீசன் தொடங்கி விட்டால் விலை குறையும் , அந்த சீசன் குறைவாக தான் வருகிறது. பங்கனபள்ளி மாம்பழம் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும், செந்தூரா, ஜவ்வாது மாம்பழம் உள்ளிட்டவை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்கள் சந்தைக்கு வந்து
பழங்கள் வாங்குவது குறைந்து விட்டதாக  பழக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.