காவிரி டெல்டாவை அழிக்க, மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில அரசிடம் இது தொடர்பாக கேட்டால், எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்த்து செயல்படுகிறது.
இதையும் படியுங்கள் : வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
என்.எல்.சி தரும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை. டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க விடமாட்டேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். சட்டப்பேரவையில் என்.எல்.சி நிறுவனத்திற்கு, 6 சுரங்கங்களுக்கான அனுமதி கிடையாது என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை காண :