முக்கியச் செய்திகள் தமிழகம்

நாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு முழு உருவ சிலை நிறுவ வேண்டும் -வ.உ.சி கொள்ளு பேத்தி

கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப்பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி , தென்னக இந்தியாவின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ உ சிதம்பரனாரின் முழு வெண்கல உருவச்சிலையை நிறுவப்பட வேண்டும் என பேசினார்.

மேலும், நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வ உ சிதம்பரனார் பெயரைச் சூட்டவும் கோரிக்கை விடுத்தனர் .  தொடர்ந்து பேசிய அவர், இது சம்பந்தமாகக் கோவில்பட்டிக்கு வருகை தந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்து உள்ளதாக கூறினார்.  இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் சார்பாக கேட்டுக் கொள்வதாக வ.உ.சி. கொள்ளுப்பேத்தி  தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிங்கப்பூரில் இருந்து ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் வந்த ஆக்சிஜன்!

Halley Karthik

திருமணம் செய்து வைக்கக்கோரி காவல்துறையிடம் உதவி கேட்ட உ.பி. இளைஞர்!

Gayathri Venkatesan

கள்ளக்குறிச்சி கலவரம்: பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைப்பு

G SaravanaKumar
RBI அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சியின் செயல்பாடுகள் வந்தான் சோழன்! வெளியானது பொன்னியின் செல்வன்!! சென்ற இடமெல்லாம் வென்ற மாமன்னன் ராஜராஜன் சென்னை டூ மைசூரு – வந்தே பாரத் ரயில் பிரான்சின் செவாலியர் விருது பெற்ற தமிழர்கள்