முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் – பிரதமர் மோடி

தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில், தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பது தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மாநாட்டை உலகம் தீவிரமாக கவனித்து வருவதாக தெரிவித்தார். பல ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களை தீவிரவாதம் இந்தியாவை காயப்படுத்த முயன்றதாகவும், ஆனால், தீவிரவாதத்திற்கு எதிராக நாம் தைரியமாக போராடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீவிரவாதத்தின் ஆபத்துகளை உலகிற்கு யாரும் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை எனக்கூறிய பிரதமர் மோடி, சில வட்டாரங்களில் தீவிரவாதம் குறித்து இன்னும் தவறான கருத்துகள் நிலவுவதாக கூறினார். மேலும், தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், தீவிரவாதிகளுக்கு வரும் நிதியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தீவிரவாதத்தின் இருண்ட முகத்தை நம் நாடு கண்டுள்ளது என்ற பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; பெண் பலி

Halley Karthik

காமன்வெல்த் போட்டி; இந்திய தடகள அணிக்கு 37 பேர் தேர்வு

G SaravanaKumar

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்துவைக்கும் முதல்வர் பழனிசாமி!

Jeba Arul Robinson