#suitcase-ல் துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்! சென்னையை அதிர வைத்த கொடூர கொலை…

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன்…

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் போலீசார், ரத்தக் கறைகளுடன் இருந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த போது, பெண் ஒருவரை துண்டு துண்டாக சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை மணலி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க தீபா என்ற பெண் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, கொலை செய்யப்பட்டு இருக்கும் உடல் தீபா என்பதும் போலீசார் விசாரனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து தீபாவை யார் கொலை செய்தது, எதற்காக கொலை செய்யப்பட்டார், வேறு எங்கோ கொலை செய்துவிட்டு உடலை வெட்டி சூட்கேஸில் வைத்து இங்கு வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் காவல் இணை ஆணையர் மற்றும் அடையாறு துணை ஆணையர் ஆய்வு செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.