’ஹனுமான்’ திரைப்படம் பார்த்து விட்டு தியேட்டரில் சாமியாடிய ரசிகை ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12-ம் தேதி வெளியானது. ராமாயணத்தை மையமாக வைத்தும் குறிப்பாக ஆஞ்சநேயரையும், அவர் பக்தரையும் வைத்தும் சூப்பர் ஹியூமன் படமாக இது வந்துள்ளது. இந்தப் படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.200 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
https://twitter.com/KantiNarasimha/status/1752249949667102842
இந்நிலையில், தியேட்டர் ஒன்றில் சமீபத்தில் ‘ஹனுமான்’ திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவர் சாமி வந்து ஆடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அப்பெண்மணியை அங்கிருந்தவர்களும் அவரது குடும்பத்தினர் கட்டுப்படுத்த முயல்கின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிர்மறை கருத்துகளையும் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.







